வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

November 04, 2010

ரேவதி


அவள் விழிகள் கருநிறமானவையல்ல
ரேவதி
கருங்கபில நிறம் கொண்டவை அவை..
வெளிச்சம் மின்னுகையில்
கபிலம் தங்கம் நிறங்களுடையவையாகத் தோன்றும்
எங்கள் சந்திப்புக்கள் மிகவும் ரகசியமானவை
காற்றலைகள் கூட அறியாதவை

என் ஆருயிர்க் காதலியினது
அழகிய மார்புகள்
எனது
உள்ளங்கைகளை உயிர்ப்பிக்கக்கூடியவை..

கொட்டும் மழை
இப்போது
அவள் கால்களின் நடுவே
வழிந்தோடும்
வியர்வைத்துளிகள்

நான்
கண்களைக் கட்டிக் கொண்டே
என் பாதையை அறிந்து கொள்கின்றேன்..


* இக்கவிதையைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தேன். மூலப்பிரதி தவறிப்போய்விட்டது. மூலக்கவிஞரது பெயரும் ஞாபகத்தில் இல்லை. ஆனால், அவர் ஒரு இந்தியப்பெண் கவிஞர் என்பது மட்டும் ஞாபகத்தில் உள்ளது.

Statcounter